Showing posts with label வைரமுத்து. Show all posts
Showing posts with label வைரமுத்து. Show all posts

Friday, September 23, 2011

வைரமுத்து, "சொல்லாயோ சோலைக்கிளி" பாடலில்

பச்சைக் கிளை இலைகளுக்குள்ளே,
ஒற்றைக்கிளி ஒளிதல் போல,
இச்சைக் காதல் நானும் மறைத்தேன்...

பச்சைக் கிளி மூக்கைப்போல,
வெட்கம் உன்னைக் காட்டி கொடுக்க,
காதல் உள்ளம் கண்டு பிடித்தேன்!!!

- வைரமுத்து, "சொல்லாயோ சோலைக்கிளி" பாடலில்

வைரமுத்து, "புது வெள்ளை மழை" பாடலில்

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை;
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை.

உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது

இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யார் சொன்னது?

- வைரமுத்து, "புது வெள்ளை மழை" பாடலில்

வைரமுத்து, "காடு திறந்தே" பாடலில்

பூமிக்கு வந்த பனித்துளி நான்,
சூரியனே என்னைக் குடித்துவிடு.

யுகம்யுகமாய் நான் எரிந்துவிட்டேன்,
பனித்துளியே என்னை அணைத்துவிடு.

- வைரமுத்து, "காடு திறந்தே" பாடலில்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம்தான்
எண்ணூறு ஆண்டுகளா இதயத்தில் கனக்குதடி !

பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்!
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்!

இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும்
முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம் !

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை !
அது இரவா அது பகலா அது பற்றி அறியவில்லை!

யார் தொடங்க யார் முடிக்க ஒரு வழியும் தோன்றவில்லை !
இருவருமே தொடங்கிவிட்டோம் இதுவரைக்கும் கேள்வியில்லை !

அச்சம் களைந்தேன் ஆசையை நீ அணிந்தாய் !
ஆடை களைந்தேன் வெட்கைத்தை நீ அணிந்தாய் !

கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர் கண்ணில் இன்னும் கொட்டுதடி !

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

- வைரமுத்து

வைரமுத்து

கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா?
என் கனவோடு கேட்கின்ற கால்சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர்தந்த சப்தங்கள் நீயா?
எனை பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
எனை சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயா?
பருவத்தின் தோட்டத்தில் முதல் பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?

இரவோடு நான் காணும் ஒளிவட்டம் நீதான்;
என் இரு கண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்;
வார்த்தைக்குள் ஊடாடும் உள் அர்த்தம் நீதான்;
என் வாத்தியத்தில் இசையாகும் உயிர் மூச்சும் நீதான்.
தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான்
என் பக்கத்தில் அக்னியாய் சுட்டவளும் நீதான்
காதலுக்கு கண் திறந்து வைத்தவளும் நீதான்
நான் காதலித்தால் கண்மூடி கொண்டவளும் நீதான்!

- வைரமுத்து

வைரமுத்து

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே - அடி
தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்;
உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் - அது
தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்???
எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அடி
எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன் என்
இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்
- வைரமுத்து

வைரமுத்து, "இளைய நிலா" பாடலில்

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ?
முகவரிகள் தொலைந்ததனால் அழுகிறதோ?
அது மழையோ?

- வைரமுத்து, "இளைய நிலா" பாடலில்