Friday, September 23, 2011

வைரமுத்து

கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா?
என் கனவோடு கேட்கின்ற கால்சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர்தந்த சப்தங்கள் நீயா?
எனை பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
எனை சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயா?
பருவத்தின் தோட்டத்தில் முதல் பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?

இரவோடு நான் காணும் ஒளிவட்டம் நீதான்;
என் இரு கண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்;
வார்த்தைக்குள் ஊடாடும் உள் அர்த்தம் நீதான்;
என் வாத்தியத்தில் இசையாகும் உயிர் மூச்சும் நீதான்.
தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான்
என் பக்கத்தில் அக்னியாய் சுட்டவளும் நீதான்
காதலுக்கு கண் திறந்து வைத்தவளும் நீதான்
நான் காதலித்தால் கண்மூடி கொண்டவளும் நீதான்!

- வைரமுத்து

No comments:

Post a Comment