Friday, October 14, 2011

படிப்பு - வீரான் குட்டி (மலையாளம்)

புரியவேயில்லை
அவளுக்கு
பட்டுப்பூச்சி படம்காட்டி
டீச்சர்
வண்ணத்துப் பூச்சி
என்று
கற்பித்துக் கொண்டேஇருந்தது.

கடைசியில்
கஷ்டப்பட்டு
அவளும்
வண்ணத்துப்பூச்சி
என்று
சொல்ல ஆரம்பித்தாள்.

பட்டுப்பூச்சி என்று
அதை
அதன் வீட்டில்
கூப்பிடுவார்களாக இருக்கும்
என்று எண்ணியபடி

No comments:

Post a Comment